ரஸ்யாவின் இரகசிய முதல் பெண்மணிக்கும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு!(Video)
ரஷ்ய ஜனாதிபதியின் நண்பி என்று நம்பப்படும் பெண்ணுக்கும் பயணத்தடை விதிப்பது குறித்து மதிப்பாய்வு செய்யப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, நேற்றைய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இதனை குறிப்பிட்டார்
புடினின் நண்பியும் (ரஸ்யாவின் இரகசிய முதல் பெண்மணி) ரஷ்ய அரசியல்வாதியும் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபேவாவை ஏன் இன்னும் தடைசெய்யவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது பயணத் தடைகளை மதிப்பாய்வு செய்து வருவதாக ஜென் சாகி கூறினார்.
தடைகளிலிருந்து இருந்து யாரும் தப்பமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ஜனாதிபதி புடினை மற்றும் அவரது இரண்டு மகள்மார் ஆகியோருக்கு அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புடினின் நண்பியாக முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபேவா கூறப்பட்டாலும் புடின் அதனை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.