வெள்ளை மாளிகை விருந்தரங்கத் திட்டத்திற்கு ஒப்புதல் : ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பிரம்மாண்டமான விருந்தரங்கம் (Ballroom) ஒன்றைக் கட்டுவதற்கு முன்வைத்துள்ள திட்டத்திற்கு, அவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நுண்கலை ஆணைக்குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்களையும் முக்கியப் பிரமுகர்களையும் வரவேற்று உபசரிக்க தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், இதற்காக 150 ஆண்டுகாலமாகத் தேவைப்படும் ஒரு வசதி இப்போது உருவாக்கப்படுவதாகவும் அந்தப் ஆணைக்குழுவின் தலைவர் ரோட்னி மிம்ஸ் குக் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஈரானுக்கு கிடைத்த கெட்ட செய்தி! அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது அமெரிக்கா
ட்ரம்ப்பின் திட்டம்
இந்தத் திட்டத்திற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி (East Wing) கடந்த ஒக்டோபர் மாதம் இடிக்கப்பட்டது.
சுமார் 1,350 பேர் அமரக்கூடிய வசதியுடன் கட்டப்படவுள்ள இந்த அரங்கம், "உலகின் மிக அழகான விருந்தரங்கமாக" இருக்கும் என்றும், இதற்குத் தனியார் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டப்படும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பகுதியை முறையான சட்ட அனுமதியின்றி இடித்தமை சட்டவிரோதம் என்று கூறி, 'தேசிய வரலாற்றுப் பாதுகாப்பு அறக்கட்டளை' நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாகப் பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை எதிர்ப்புத் தெரிவிப்பதாகவே அமைந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தோமஸ் லுப்கே தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய தலைநகர் திட்டமிடல் ஆணைக்குழுவின் (NCPC) இறுதி ஒப்புதலுக்காக இத்திட்டம் தற்போது காத்திருக்கிறது.
வெள்ளை மாளிகையில் விருந்தரங்கம் தவிர, அமெரிக்காவின் 250 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட வெற்றி வளைவை (Triumphal Arch) உருவாக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புக்கள்! கைதான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில் மன்னர் சார்ள்ஸின் அறிவிப்பு
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam