பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றதா? வெளியாகியுள்ள தகவல்
கோவிட் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மே மாதம் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்து. அந்த தடை மே மாதம் 30ம் திகதி வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்தமையால், அந்தத் தடை நீடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, “பயணத்தடையை நீக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
