பொது மக்களால் ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைக்கப்பட்ட போது பொறுமை காத்த கோட்டாபய
மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி இல்லத்தை பொது மக்கள் சுற்றிவளைத்த போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்குள் அமைதியாக இருந்ததாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மிகவும் பொறுமையாக செயற்பட்டதாகவும், எதிர்ப்பாளர்கள் தனது வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தடுப்புகளை கவிழ்க்க முயன்றபோதே இராணுவம் வரவழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அடிப்படைவாதிகளால் போராட்டம் நடத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. பொதுச் சொத்துக்களை அழித்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் மட்டுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் நாகரீகம் தெரிந்த மக்களாக ஜனநாயக ரீதியாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கேட்பதற்காக கல்லெறிவதோ அல்லது சுவர்களை இடிப்பதோ தேவையில்லை. இதற்கு தீவிரவாதம் என்பதைத் தவிர வேறு வார்த்தை உண்டா? “அரபு வசந்தம்” மீண்டும் வரவேண்டும் என்று அரசியல் தீவிரவாதிகள் அண்மைக்காலமாக சுவரொட்டி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
.இது போன்ற பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அரபு வசந்தத்திற்குப் பதிலாக வேறொரு வசந்தம் வர வேண்டுமானால், அதற்குப் பதிலாக “அரசியல் தீவிரவாதம்” என்ற வார்த்தை வரவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரிஹான வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரக்கூடாது என்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவியபோது,
அந்தப் பரிந்துரைகள் சிரியாவிற்கோ ரஷ்யாவிற்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என்றால் என்றால், அவை எம்மை எவ்வாறு பாதிக்கும்? கோழைகள் போல எல்லாவற்றுக்கும் சம்மதிக்க வேண்டுமா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
