பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிய மகிந்த, நாமல் - குளிரூட்டப்பட்ட அறையில் சந்தேக நபர்கள்
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கான பட்டியலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்காமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்த 22 பேரின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமலின் பெயர் உள்ளடங்கவில்லை என தெரியவந்துள்ளது.
01. சதா எனப்படும் மாலக விஜேசிங்க 2. மிலன் ஜயதிலக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) 3. பந்துல ஜயமான்ன 4. தினேஷ் கீதக 5. சமன்லால் பெர்னாண்டோ (மொரட்டுவை மேயர்) 6. சனத் நிஷாந்த (நாடாளுமன்ற உறுப்பினர்) 7. அரபி வசந்த 8. தேசபந்து தென்னகோன் (சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்) 9. சுபாஷ் (தெஹிவளை நகர சபை) 10. அமல் சில்வா 11. சமீர சதுரங்க ஆரியரத்ன 12. ருவன்வெல்ல ரமணி 13. துசித ரணபாஹு 14. சஜித் சாரங்க 15. மஹிந்த கஹந்தகம 16. டேன் பிரியசாத் 17. புஷ்பலால் குமாரசிங்க 18. சஜீவ எதிரிமான்ன (நாடாளுமன்ற உறுப்பினர்) 19. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (நாடாளுமன்ற உறுப்பினர்) 20. நிஷாந்த மெண்டிஸ் (மொரட்டுவ) 21. புஷ்பகுமார (முன்னாள் இராணுவ அதிகாரி) 22. ஷவீன் பெர்னாண்டோ (வென்னப்புவ) ஆகியோரின் பெயர்களே அந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தப் பட்டியலிலுள்ள சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குளிரூட்டப்பட்ட அறைகளும் உண்பதற்கு ப்ரைட் ரைஸ் வழங்கப்படுவதாகவும் குறித்த ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri