ரணிலுக்கு ஏற்பட்ட சங்கடம் - பதவியேற்பு நிகழ்வின் போது தடைப்பட்ட மின்சாரம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பதவியேற்புக்காக அரச தலைவருக்கான சிவப்பு கம்பளத்தில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்புக்கள் தடை
இதன் காரணமாக பதவியேற்பு நிகழ்வுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கள் தடைப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்கும் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு (Video) |
திட்டமிட்ட வகையில் சில தரப்பினரால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதவிப்பிரமாணத்தின் போது இவ்வாறான செயற்பாடுகள் அபசகுணத்தின் வெளிப்பாடு என அங்கிருந்த சிலர் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
இது தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நேற்றையதினம் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.