நாட்டை விட்டு வெளியேறும் பயணிகள் செலுத்த வேண்டிய தீர்வை மீள்திருத்தல் தொடர்பில் அறிவிப்பு
சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறும் பயணிகள் செலுத்த வேண்டிய எம்பார்க்கேஷன் என்ற விமான மற்றும் கப்பலில் செல்வதற்கான தீர்வையை, மீள்திருத்தம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகள் எம்பார்க்கேஷன் தீர்வையாக 30 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.
கட்டணங்கள்
இந்தக் கட்டணங்கள் 2022 மார்ச் 27 முதல் 2023 மார்ச் 26ஆம் திகதி வரை அறவிடப்படும்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரிடம் இருந்தும் 30 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.
2023 ஜனவரி 12 முதல் 2023 ஜூலை 11 வரையிலான காலகட்டத்தில் இந்தக் கட்டணங்கள் பொருந்தும்.
மத்தல, இரத்மலானை அல்லது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தவிர வேறு விமான நிலையங்களில் இருந்து இலங்கையை விட்டு வெளியேறும் எவரும் 60 அமெரிக்க டொலர்களை எம்பார்க்கேஷன் தீர்வையாக, செலுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுபவர்களுக்கும் பொருந்தும்.
12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரிவிதிப்பு
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக புறப்படுபவர்களுக்கும் 60 அமெரிக்க டொலர்கள் எம்பார்க்கேஷன் வரி விதிக்கப்படும்.
எனினும் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் சேவைகளை ஆரம்பிக்கும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களுக்கு இந்த வரி விதிக்கப்படுவதிலிருந்து இரண்டு வருட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த எம்பார்கேஷன் வரி விதிகள் 2023 ஜனவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.