இன்னும் ஒரே வாரத்தில் தீர்வு! அமைச்சர் வெளியிட்டுள்ள நம்பிக்கை
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், மக்கள் நாளாந்தம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும், எரிவாயுவுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயு வரிசைகள் தினமும் நீண்டு கொண்டே செல்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதித்துள்ளதோடு, சிறு சிறு உணவகங்கள், வியாபார நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளதோடு அதனை நம்பி வாழும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கே பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
