வாட்ஸ்அப் காதலால் ஏற்பட்ட விபரீதம்! 15வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
வாட்ஸ் அப் காதலுக்குள்ளான 15 வயது சிறுமியை உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞன், சிறுமியை துஷ்பிரயயோகம் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் ஊடாக காதல்
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன், அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் வாட்ஸ்அப் மூலமாக காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். சிறிது காலம் நீடித்த இவர்களது வாட்ஸ் அப் காதல் தொடர்ந்தது.
இந்நிலை நிலையில் சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த காதலன், சிறுமியுடன் பேசிக், கதைத்து ஏமாற்றி கண்டி கெட்டம்பே பகுதியிலுள்ள உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தலை மறைவாகியுள்ள இளைஞர்
அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் இளைஞர் தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏமாற்றமடைந்த சிறுமி, கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்ததால், இளைஞர் தேடப்பட்டு வருகிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்... தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி Cineulagam
