காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின் பயன்பாடு என்ன?

Government Protest People Mannar
By Kanamirtha Oct 13, 2021 11:15 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் கடந்த 12 வருடங்களாகத் தொடர்ச்சியாகச் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த மக்களுக்கு நீதியை இது வரையில் இலங்கை அரசாங்கம் தரவில்லை என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இணையத்தில் இன்றையதினம் (13) காலை ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

''சர்வதேசத்தின் அழுத்தத்தின் மத்தியில் நிலைமாறு கால நீதி என்ற வகையில் உருவாக்கப்பட்ட காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகமானது 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க தற்காலிக ஏற்பாட்டின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த சான்றிதழ் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும் குறித்த உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெயர்கள் அரச கட்டமைப்புக்களில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையில் இடம் பெற வேண்டும் என கருதி சில பாதிக்கப்பட்ட மக்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழினைப் பெற்றுக் கொள்ள உடன்பட்டு இருந்தார்கள்.

குறிப்பாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு முக்கிய ஆவணங்களான தேசிய அடையாள அட்டை பிரதி, பிறப்புச் சான்றிதழ், திருமண பதிவு பத்திர பிரதி, ஆணைக்குழுக்களின் எழுத்து மூலமான கடிதம், பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு அல்லது இடைக்கால அறிக்கை, சத்தியக்கடதாசி மற்றும் ஊடக செய்திகள் ஆகிய ஆவணங்கள் தேவைப்பாடுகளாகக் கோரப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் தேடிப் பெற்றுக் கொள்வதற்குக் குறித்த எமது உறவுகளுக்கு இரண்டு தொடக்கம் மூன்று மாதங்கள் ஆகிவிடுகின்றன.

இவ்வாறு பதிவு செய்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டாலும் அச் சான்றிதழினைப் பயன்படுத்திக் காணாமல் ஆக்கப்பட்ட நபருக்கு உரித்தான சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அல்லது காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கோ குறித்த அரச திணைக்களங்கள் குறித்த சான்றிதழை ஏற்றுக் கொள்ளவில்லை.

குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழில் 'ஏதேனும் சமூக சேமநல திட்டத்தின் கீழ் நன்மைகளுக்காக விண்ணப்பிக்கும் போது காணாமற்போன ஆளினதும் அத்தகைய மரணச்சொத்தினதும் சார்பில் நிறைவேற்று நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் முன்னால் முறையீடுகளைச் செய்யும் போதும் காணாமற்போன ஆளின் நிலைமைக்கான எண்பிப்பாகக் காணப்பட்டமைக்கான சான்றிதழை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்படி எல்லா நிறுவனங்களையும் அதிகாரங்கொண்ட ஆட்களையும் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புக்களினதும் காணாமற்போன ஆட்களினதும் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 8ஒ(2) ஆம் பிரிவு தேவைப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தும் இறப்புச் சான்றிதழ்களையே கோருகின்றனர்.

அவ்வாறாயின் இவ் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின் பயன்பாடு என்ன? அதனால் எந்தவொரு பயன்பாடும் இல்லை என்ற உண்மை நிலையைக் குறித்த உறவுகள் உணர்ந்துள்ளனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அமைந்துள்ள காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தில் சகல ஆவணங்களும் வழங்கப்பட்டுப் பதிவு செய்த போதும் மீண்டும் கொழும்பு தலைமை அலுவலகத்தின் தரவு முகாமைத்துவ தலைவர் கையொப்பமிட்டு மேலதிக விபரங்கள் தேவை எனக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவட்ட காரியாலயங்களில் அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட போதும் மீண்டும் அந்த ஆவணங்களைக் கோருவதானது இன்னும் பல காலங்களைக் கடத்தும் செயற்பாடுகளாகவே அமைகிறது. ஏற்கனவே முதற்கட்ட பதிவிற்காகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் முழுமையான ஆவணங்களை வழங்கியுள்ளனர்.

அது போல காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழைப் பெறுவதற்காகப் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் குறித்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களின் பிரதிகள் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்திற்கும் வழங்கப்படுமாயின் குறித்த செயற்பாடு வினைத்திறனாக அமையும்.

முதல் முறையாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய பதிவுகளை மேற்கொள்ள வருகின்றபோதே தங்களிற்குத் தேவையான சகல ஆவணங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகமானது பாதிக்கப்பட்ட மக்களிடம் கோருமாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் அரச திணைக்களங்களிற்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.

காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழை மீளப்புதுப்பித்தல் செயற்பாட்டிற்காக அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மீளப்புதுப்பித்தல் விண்ணப்பப்படிவத்தைப் பாதிக்கப்பட்ட மக்கள் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்படாமை என்பது மிகப் பெரிய குறைபாடாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்திலும் பிரதேச செயலகங்களிலும் காணப்படுகின்றது.

குறிப்பாகப் பிறப்பு, இறப்பு பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பப்படிவம், விவாக பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் போன்றன அரசாங்கத்தினால் பிரதேச செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்களை மீளப்புதுப்பித்துப் பெற்றுக் கொள்வதற்கு அதற்கு உரித்தான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்களை மீளப்புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம் பிரதேச செயலகத்தில் இற்றை வரை அமுலில் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழ்களை மீளப்புதுப்பிப்பதற்கு மக்கள் வரும் போது மீளப்புதுப்பித்தல் வேண்டுகோள்; கடிதத்தினை குறித்த உறவுகள் பிரதேச செயலகத்தில் கையளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

ஆனால் இக் குறித்த நடை முறைச் செயற்பாடு பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்தும் ஆவணங்களைச் சேகரிப்பது சரிபார்க்கும் செயற்பாடுகள் என்பவற்றை மேற்கொள்ள வேண்டுமானால் இன்னும் 10 வருடங்களுக்கு மேலாகத் தகவல் திரட்டல் மற்றும் ஆவணப்படுத்தல் செயற்பாடு மட்டுமே பூர்த்தியாக்கப்படும்.

பிரதேச செயலகத்திற்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்ட தரவுகளை மக்களின் நலன் கருதிப் பகிரப்படுமானால் இவ் அலுவலகம் வினைத்திறனாக இயங்குவதற்கு வாய்ப்பாக அமையும்.

அவ்வாறு இல்லாமல் தொடர்ந்தும் இவ்வாறான காலம் தாழ்த்தல்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் தங்கள் பிள்ளைகளுக்கான நீதி கிடைக்காமலே தமது உயிர்களை இழந்து வருகின்ற நிலையில் தாமதமாகிய நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமனாகும் என்ற தோற்றப்பாட்டையே உருவாக்கும்.

தற்போதைய அரசாங்கமானது மிகவும் மந்த கதியில் நடைபெறும் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் செயற்பாட்டினை மிகவும் காத்திரமான செயற்பாடாக உருமாற்றி சர்வதேசத்திடம் அறிக்கைகளை முன்வைத்துப் பூசி மெழுகும் செயற்பாட்டைச் செய்து வரும் நிலையில் இயங்கி வருகின்றமை வருத்தத்திற்குரிய செயற்பாடாக அமைகின்றது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களால் இனங்காணப்பட்ட குறைபாடுகளை அரசின் மேன்மை தாங்கிய கவனத்திற்குக் கொண்டு வருவதோடு, மேலும் மேலும் காலதாமதம் ஏற்படுத்தாது சட்ட ஏற்பாடுகளை முற்று முழுதாக உள்ளடக்கிய வினைத்திறனான ஓ.எம்.பி அலுவலகத்தினையும் அதன் சேவையினையும் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்'' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

GalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US