அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு

Sri Lankan Tamils Tamils
By Rakesh Jun 23, 2026 12:22 AM GMT
Report

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத் தயாரிப்பதற்காக 33 நபர்களைக் கொண்ட 'ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு' தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் பொதுச் சபையின் இரண்டாவது கூட்டமானது யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தரப்பு

இந்தக் கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு | What Kind Political Organization Does Tamil Side

33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு: நேற்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவானது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுவான அரசியல் அமைப்பு வரைவு ஒன்றை மக்கள் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தயாரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய தீர்மானங்கள்

புதிய அரசமைப்புக்கான நகல் தயாரிப்பு: தற்போதைய புதிய அரசால் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்கள் சார்பில் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட வேண்டிய முன்மொழிவுகள் அடங்கிய நகலைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன், அந்தக் குழு தனது பணிகளைத் தொடர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு | What Kind Political Organization Does Tamil Side

 தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ஆதரவு: தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது என்றும், அது சரியான பாதையில் பயணிக்கும் போது தேவையான முழு ஒத்துழைப்பை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஈழத் தமிழர் அரசியல் நிர்ணய சபையின் செயற்பாடுகளில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும் தனது பங்களிப்பை நல்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உத்தியோகபூர்வ கடிதமொன்றை வரைவதற்கும் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US