வரி செலுத்தாத 25 புதிய தொழில்களுக்கு வரி: நீங்களும் இதில் அடங்குகிறீர்களா?
இலங்கை இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களுடன், தடுத்து வைக்கப்படும் வரி (Withholding Tax - WHT) செலுத்த வேண்டியவர்களின் வரம்பு பெருமளவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த வரி வலையமைப்பிற்குள் உள்வாங்கப்படாத பல துறைகள் இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும். இது இலங்கையில் வாழும் தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் (வியாபாரங்கள் அல்லது நிறுவனங்களுக்கு அல்ல).
இறுதிப்போரில் அம்பலமான யோஷித ராஜபக்சவின் போலி நாடகம் - படகை செலுத்திய முன்னாள் வீரரின் பரபரப்பு தகவல்கள்..!
புதிதாக உள்வாங்கப்பட்டவர்கள்
நீங்கள் ஒரு நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக இல்லாதிருந்து, அந்த நிறுவனத்திற்குப் புறம்பாக ஏதேனும் ஒரு சேவையை வழங்குபவராக இருந்தால் (Freelance / Independent Service) இது உங்களுக்குப் பொருந்தும்.
நீங்கள் பெறும் ஒரு தனிப்பட்ட கொடுப்பனவு ரூ. 100,000 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த வரி அறவிடப்படும்.
அதன்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் உங்களது கட்டணத்திலிருந்து 5 சதவீதத்தை கழித்துவிட்டு மீதியை உங்களுக்கு வழங்கும். புதிதாக வரி வலையமைப்பில் உள்வாங்கப்பட்ட 25 தொழில்கள்:
இதற்கு முன்னர் இருந்த மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு மேலதிகமாக, இப்போது பின்வருவோரும் 5 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்:
கணக்காய்வாளர்கள் (Auditors) மொடலிங் செய்பவர்கள் (Models) தனிப்பட்ட பயிற்சியாளர்கள் (Personal Trainers) விளையாட்டுப் பயிற்சியாளர்கள் (Sports Coaches) மதிப்பீட்டாளர்கள் (Valuers) கலைஞர்கள் (Artists) நடிகர்கள் (Actors) நடனக் கலைஞர்கள் (Dancers) வீடியோ கலைஞர்கள் (Videographers) சிகிச்சையாளர்கள் (Therapists)

மனநல சிகிச்சையாளர்கள் (Psychotherapists) ஒப்பனைக் கலைஞர்கள் (Beauticians) சமையல் கலைஞர்கள் (Chefs) மின்சார வல்லுநர்கள் (Electricians) பல் மருத்துவர்கள் (Dentists)
கால்நடை மருத்துவர்கள் (Veterinarians) சமூக ஊடக நிபுணர்கள் (Social Media Specialists) வர்த்தகநாம தூதுவர்கள் (Brand Ambassadors) விளையாட்டு வீரர்கள் (Athletes/Sports Persons)
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் (IT Specialists) விளம்பர முகவர்கள் (Advertising Agents) ஆலோசகர்கள் (Consultants) மொழிபெயர்ப்பாளர்கள் (Translators) எழுத்தாளர்கள் (Writers) கடன் சேகரிப்பாளர்கள் (Debt Collectors).
வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? (உதாரணம்) நீங்கள் இரண்டு நிறுவனங்களுக்கு மொடலிங் செய்பவராக சேவை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்:
நிறுவனம் A இலிருந்து: ரூ. 120,000 கொடுப்பனவு கிடைத்தால், 5% வரி (ரூ. 6,000) கழிக்கப்பட்டு உங்களுக்கு ரூ. 114,000 மட்டுமே கிடைக்கும்.
நிறுவனம் B இலிருந்து: ரூ. 75,000 கொடுப்பனவு கிடைத்தால், அது ஒரு இலட்ச ரூபாவிற்கும் குறைவு என்பதால் வரி அறவிடப்பட மாட்டாது. முழுத்தொகையும் உங்களுக்குக் கிடைக்கும்.