வவுனியாவின் நிலை என்னாகும்?
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஒழுங்கையிலிருந்து 5 ஆம் ஒழுங்கை வரை அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் எவரும் வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் பொலிஸார் கடமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறித்த பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.
இச் சூழலில் குறித்த பகுதியிலிருந்து வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதார பகுதியினரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த அறிவுறுத்தல் செவிமடுக்கப்படாத நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
காலையிலிருந்து பட்டாணிச்சூர் பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிப்பவர்களின் வர்த்தக நிலையங்கள் எவ்வாறு திறக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்குமப்பால் வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவானோர் நடமாடி வருவதனால் வவுனியாவின் நிலை என்னவாகும் என்பதே மக்களின் அச்சமாகவுள்ளது.




குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri