அவசரகால தடைச்சட்டம் எதற்காக..! கேள்வி எழுப்பும் கருணாநிதி
அவசரகால தடைச்சட்டம் எதற்காக தேவைப்படுகின்றது என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எதுவித பிரயோசனமும் அற்ற சட்டத்தை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்துவதில் பயனில்லை. நாட்டிற்கு எதிராக இனவாதத்தை ஏற்படுத்துபவர்களை கைது செய்ய வேண்டும்.
குறிப்பாக இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் எல்லோரும் பலத்த பாதுபாப்புடனேயே யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தனர். ஆனால் இன்று ஜனாதிபதி அநுர சுதந்திரமாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வருகின்றார்.
எந்த ஜனாதிபதிக்கும் இல்லாத ஆதரவு அநுரவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவை எல்லாம் அந்தப்பகுதியில் எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையும் இல்லை என்பதையே உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்......