இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..!
பூமிப்பந்தின் மனிதகுல வரலாற்றில் மனித சமூக வளர்ச்சிக்கு இனங்கள் சார்ந்தும், பிரதேசங்கள் சார்ந்தும், மொழி சார்ந்தும் ஐரோப்பியர்கள், சீனர்கள், இந்தியர்கள், அராபியர்கள், ஆபிரிக்கர்கள் என மனிதக் குழுமங்கள் ஆக்கத்திறனில் ஈடுபட்ட மனிதகுல நாகரிகத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் பற்பல ஆக்க கருவிகளையும், கண்டுபிடிப்புகளையும், அறிவியலையும் தத்தமது பங்களிப்புக்களாக வழங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழர்கள் உலக சமூகத்துக்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு "கடலாதிக்க அரசியல் கோட்பாட்டை" வழங்கி அதனை நடைமுறை நடைமுறைப்படுத்தி காட்டி இருக்கிறார்கள் என்பதே பதிலாக அமையும்.
உலகளாவிய வரலாற்றில் தரைசார் பேரரசுகளே தோற்றம் பெற்று தரைவழியாக அரசுகள் விஸ்தரிக்கப்பட்டன. அரசு என்ற நிறுவனம் தோன்றி 3500 ஆண்டு காலம் அதன் எல்லை தரை வழியாகவே விஸ்தரிக்கப்பட்டது.
இந்துமா கடல்
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கிபி 10ம் நூற்றாண்டில் தமிழர்களால் இந்துமா கடலை கடந்து நாடுகளை உருவாக்கிய உலகின் முதலாவது கடலாதிக்கப் போரரசு சோழப் போரரசாகும்.
10ஆம் நூற்றாண்டிலிருந்து13ஆம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து-பசுபிக் சமுத்திரப்பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும்(தமிழன்கடல்), தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அராபியக் கடலிலும் சோழர்களின் கடற்படையும், சோழர்களின் வர்த்தக கம்பனிகளான ஐநூற்ரொருவர் கணம், நானாட்டார் கணம் போன்றவை ஏகசெல்வாக்குச் செலுத்தின.
சோழர்கள் தான் முதன் முதலில் கடல் கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்காசியாவில் ஸ்ரீவிஜயா சாம்பிராஜ்சம் என்ற ஒருஅரசை ஸ்தாபித்தார்கள். கடல்கடந்து போரரசுகளை உருவாக்கலாம் என்பதை உலகிற்கு முதலாவதாக செய்துகாட்டியவர்கள் சோழர்கள்தான்.

உலகின் முதலாவது கடற்படையும் சோழர்களதே. சோழர்களின் கடல்வீரர்களை சுமந்துகொண்டு தொடராக இந்தோ –பசுபிக் கடலில் உலவந்த கடற்கலங்களுக்கு நாவாய் என அன்று அழைத்தனர். இன்று ஆங்கிலத்தில் கடற்படைக்கு NAVY என்ற சொல் நாவாய் என்ற வேர்ச்செல்லில் இருந்தே தோன்றியது. அதேபோல கடலிலே பயணம் செய்த வீரர்களின் பரம்பரையினர் மறவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அந்த மறவர் என்ற அடிச்சொல்லில் இருந்துதான் Marine என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. அதனை Marine forces(கடற்படையின் சிறப்பு படைப் பிரிவுகள்) மற்றும் Marine course (கடல்சார் நடவடிக்கைகளுக்கான பயிற்சி) என பொருள்பட ஆங்கிலத்தில் பிரயோகத்தில் உள்ளது.
தென்னிந்திய சோழப் பேரரசு இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வகுத்ததுக் கைக்கொண்ட கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா "இந்தோ-பசுபிக் கோட்பாடு" என தமது நலன்சார்ந்து மீண்டும் புதுவடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
சோழருடைய கடல் ஆதிக்ககொள்கைதான் இன்றை நவீன இந்தியாவும் கை கொள்ள முனைகிறது. இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு,மேற்குகடற்கரை முழுவதும் சோழப் பேரரசு காலகட்டத்தில் அவர்களுடைய கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தன.
சோழருடைய கடல் ஆதிக்ககொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத்தீவின் தமிழர்பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியுகத்தில் இணைவது புரியும்.
சோழர்களின் கடல் ஆதிக்கம் வீழ்ச்சி.அடைகின்றபோது 13ம் நூற்றாண்டில் அராபியர்களும், 15ஆம் நூற்றாண்டில் நூற்றாண்டில் ஆரம்பத்தில் சீனர்களும், இந்துவாக கடலில் ஆதிக்கம் செலுத்தினர் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்து சமுத்திரத்துக்குள் நுழைந்த வாஸ்கோடகாமா இந்து சமுத்திர ஆதிக்கத்தை ஐரோப்பியர்களின் கைகளுக்கு மாற்றிவிட்டார்.
கூடவே தென்னிந்திய பேரரசின் எஞ்சிய சிறிய தென்னிந்திய அரசுகளும், இலங்கைத் தீவின் வட கிழக்கில் இருந்த தமிழரசுகளும் தமது இறைமையை இழந்து ஐரோப்பிய மேலாதிக்கத்துக்கு உட்பட்டு விட்டது.
ஆயினும் அரசற்ற தமிழர்கள் இந்து மகாகடலில் குறிப்பாக வங்கக் கடலில் கடலோடிகளாக தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டு வரை இருந்துள்ளார்கள். அந்தக் கடலோடும் தொழில் சார்ந்த நிபுணத்துவம் கடற்கரை வாழ் ஈழத்தமிழர்களிடம் இயல்பாக இருந்து வந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம்
இந்தப் பின்னணியில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியான பாக்கு நீரினை ஈழத் தமிழர்களின் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. போராளிகளின் பாதுகாப்பு, பயிற்சி, ஆயுத வளங்கள் என அனைத்தும் இந்த பாக்குநீரனை வழியாகத்தான் போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.
போராட்டத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் ஏற்கனவே பல நூற்றாண்டு கால கடலோடி தொழிலில் ஈடுபட்ட ஈழத் தமிழர்களின் அனுபவம் என்பன உள்ளடங்களாக இந்து சமுத்திரத்தில் பெரும் வாணிக கப்பல்களை வைத்திருக்கவும், அவற்றின் துணை கொண்டு சர்வதேச ஆயுதக் கொள்வனவில் ஈடுபடவும் போராட்டத்திற்கு ஆயுதவழங்களைச் செய்யவும் ஈழத் தமிழர்களால் முடிந்தது.

உலகளாவிய தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஒரு அரசற்ற தேசிய இனம் தனக்கான ஒரு கடற் படையை வைத்திருந்ததும், சர்வதேச கடற்பரப்பில் அதனுடைய வாணிக கப்பல்களும், போர்படகுகளும் பயணித்தமை என்பதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மட்டும்தான் நிகழ்ந்தது.
அந்த அடிப்படையில் இந்து சமுத்திரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசற்ற ஒரு தேசிய இனத்தின் கடற்படை நடமாடியது என்ற ஒரு வரலாறு தோற்றம் பெற்றது. இவ்வாறு அரசற்ற விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனத்தின் கடலாதிக்கம் இந்து சமுத்திரத்தில் நிலைபெறுவதை சக்தி வாய்ந்த நாடுகள் விரும்பவில்லை.
இது ஒருபுறம் இருக்க சீனாவிற்கு தனது புதிய பட்டுப்பாதை கோட்பாட்டை(New Skill Route Theory) விஸ்தரிப்பில் தனது தரை, கடல்சார் வீதி (The Belt And Road போக்குவரத்துக்கு கடற் புலிகள் தடையாகவும் இருக்கிறார்கள் என்பதை அது சரிவர உணர்ந்து கொண்டது.
அந்த காலகட்டத்தில்தான் அனைத்து கெடுத்தல் என்ற தந்திரத்தின் மூலம் ஒருபுறம் விடுதலைப் புலிகளுடன் இரகசிய பேச்சுக்களை நடத்தியது, மறுபுறம் ராஜபக்சத்துடன் கைகோர்த்து அவர்களுக்கான ஆயுத வளங்களையும் பொருளாதார உதவிகளையும் செய்தது.
இலங்கை தீவில் 2001 ஆம் ஆண்டு நேர்வேயின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தமும், சமாதான பேச்சுக்களும் நடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒன்பது கப்பல்கள் இலங்கை தீவில் இருந்து 750 கிலோமீட்டர் களுக்கு அப்பால் தொடக்கம் 1700 மைகள் வரைக்குமான சர்வதேச கடற்பரப்பில் அழிக்கப்பட்டன.
இதில் வங்கக் கடலில் 3 கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்டவை இலங்கையிலிருந்து 450 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் 6 கப்பல்கள் டியாகோகாசியா தீவுக்கு அண்மையில் அழிக்கப்பட்டன. அந்த கடற்பரப்பு அமெரிக்கர்களைப் பொறுத்தவரை American waters என்றே கருதுகின்றனர். தென் இந்து சமுத்திர கடற்பரப்பை our waters என்றுதான் அமெரிக்கர்கள் அழைக்கின்றனர் என்பதிலிருந்து இந்தக் கடற் பரப்பில் வேறு யாரும் தமது ஆயுதப் பாவனையை நடத்த முடியுமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை
மேற்படி விடுதலைப் புலிகளுடைய 6 கப்பல்கள் இலங்கைத் தீவினுடைய கரைகளில் இருந்து 700 கிலோமீட்டர்களுக்கு களுக்கு அப்பால் அழிக்கப்பட்டமை என்பது இலங்கை கடற்படையினதோ, விமானப்படைந்ததோ சக்திக்கு மிஞ்சிய செயல் என்பதை இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை அரசிடம் உள்ள விமானப்படையும், கடற்படையும் இலங்கையில் இருந்து 500 கிலோமீட்டர் களுக்கு உட்பட்ட பகுதிக்குள்ளேயேஅவற்றினுடைய தாக்குதிறன் கொண்டவை. அதற்கு அப்பால் சென்று அவர்களால் மீண்டும் இலங்கை நோக்கி திரும்பி வருவதற்கான எரிபொருள் வசதியுள்ள விமானங்களும், கப்பல்களோ இலங்கை அரசிடம் இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் அழிக்கப்பட்ட கப்பல்களின் வீடியோ காட்சிகள் அந்தக் கப்பல்கள் இயந்திரப் பகுதியில் தாக்கப்பட்டு எரிவதையே புலப்படுத்தியது என்பதிலிருந்து அந்தக் கப்பல்களை யாரும் அண்மிக்காமல் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே அவை அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்த முடிகிறது.

ஆகவே விடுதலைப் புலிகளுடைய கப்பல்களின் அழிவு அமெரிக்காவினாலும், சீனாவினாலும், இந்தியாவினாலும் நிகழ்ந்தது என்பதுதான் உண்மை. ஆனால் இலங்கை அரசு புலிகளின் கப்பல் அழிக்கப்பட்டது என உரிமை கூறியது மட்டுமே.
அதே நேரத்தில் அந்தக் காலப்பகுதியில் தாக்கிய அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வேறுபட்ட இடங்களில் அழிக்கப்பட்ட கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட பர்மிய நாட்டைச் சேர்ந்த மொத்தம் 47 மாலுமிகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக பர்மா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்திகளை அன்றைய காலத்தில் நாம் பார்த்தோம்.
அது இலங்கையின் ஆங்கில நாளேடுகளின் தலைப்புச் செய்தியாகவும் வந்தது. பொதுவாக விடுதலைப் புலிகளுடைய கப்பல்களில் அந்நிய நாட்டைச் சேர்ந்த ஐந்து ஆறு மாளிகை மட்டுமே பயணம் செய்வர். ஏனைய 15க்கும் மேற்பட்ட மாமிகள் விடுதலைப் புலிகளின் போராளிகளாக இருந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் மாலுமிகள் என்று சொல்லப்படும் இடத்து அவர்கள் பற்றிய கடலோடும் திறமை பற்றியும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துமா கடலில் வீசுகின்ற பெரும் ராட்சத அலைகளுக்கு நடுவே பெரும் வர்த்தக கப்பல்களில் இருந்து சிறிய படகுகளுக்கு பாரம் தூக்கிகளை பயன்படுத்தாமல் தமது உடல் வலுவினால் விடுதலைப் புலிகளுக்கான ஆயுதங்களை ஏற்றி இறக்கும் வல்லமை படைத்தவர்கள் இவர்கள் 15 வருடத்திற்கு மேற்பட்ட கடலோடி அனுபவசாளிகளாகவும் இருந்தனர்.
அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒன்பது கப்பல்களிலும் ஆக குறைந்தது 150 க்கு குறையாத தமிழர் தாயகத்தின் தலைசிறந்த மாலுமிகள் இந்துமா கடலில் கொல்லப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தரையில் நிகழவில்லை. அது இந்துமா கடலிலேயே நிகழ்ந்தது.
ஒன்பது கப்பல்களின் அழிவு என்பது விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்து வழங்கல்களையும் இல்லாதொழித்துவிட்டது. இவ்வாறு கப்பல்களின் அழிவும், அவற்றை நாம் பாதுகாக்க முடியாமல் போனமைக்கும்இந்து மகாகடல் அரசியலை அன்றைய காலகட்டத்தில் நாம் சரிவர புரிந்து கொள்ள முடியாமல் போனமைதான் என்பதை நமக்கு இன்று உணர்த்தி நிற்கிறது.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது இந்து மகாகடலில் 150 மேற்பட்ட தமிழீழ மாலுமிகளின் அவலச்சாவுடன் ஆரம்பமாகிவிட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலம் சீனாவிற்கு எந்தவித தங்கு தடையும் இன்றிய இலங்கை உள்நுழைவிற்கு கதவைத் திறந்து விட்டது என்று சொல்வதையே பொருந்தும்.
கடந்த 500 ஆண்டுகளாக இந்து மாகடலை வாஸ்கோடகாமா யுகம் அதிகாரம் செலுத்தியது ஆனால் 2000 ஆண்டுக்கு பின்னர் இந்து மகா கடல் மீது சீனா தனது பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் உள்ளே நுழைந்து விட்டது இப்போது இந்து சமுத்திரத்தின் கேந்திரத்தனங்களில் உள்ள கோகோ தீவு, அம்பாந்தோட்டை , குவாதார, யுபிட்டி, லாமோ தீவு ஆகிய துறைமுகங்களை பெற்றுவிட்டது ஜிபுட்டியில் ஒரு சீன ராணுவ கடற்படை தளத்தை அமைத்து விட்டது.

இந்த நிலையில்தான் இந்தோ-பசுபிக் கடற் பிராந்தியத்தில் மேற்குலகிற்கும் சீனாவுக்கும் இடையிலானஅதிகாரப் போட்டி இன்று உச்சம்பெற்றுவிட்டது. இந்து சமுத்திரத்தின் மையப்பகுதியில் உள்ள இலங்கைத்தீவும், இந்தியாவும் இந்த அதிகாரப்போட்டியில் முக்கிய கேந்திரஸ்தானத்தில் உள்ளன.
எனவே வரலாற்று ரீதியாக இந்தோ-பசுபிக் பிராந்திய கடலாதிக்க வலுச்சமநிலையையும் அதன் பின்னனியையும் இந்த சமுத்திர நாடுகள் பற்றி சீர்தூக்கிப் பார்ப்பது அவசியமானது. இன்று 39 நாடுகள் இந்துசமுத்திர கரையை தொட்டுநிற்கும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. ஆஸ்ரேலியா கண்டத்தில் இந்தோ பசிபிக் பசிபிக் நாடுகளாக அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினி ஆகிய இரண்டு நாடுகள் உள்ளன.
தென்கிழக்கு ஆசியாவில் மியான்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, திமோர்-லெஸ்டே ஆகிய 6 நாடுகள் உள்ளன. தெற்காசியாவில் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள்; ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. மத்திய கிழக்கில் யேமன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவூதி அரேபியா, குவைத், ஈரான், ஈராக் ஆகிய ஏழு நாடுகள் உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவில் எகிப்து, சுடான், எரித்ரியா, ஜிபிட்டி, சோமாலியா, கென்யா, தான்சானியா, மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா ஆகிய 7நாடுகள் உள்ளன.
மற்றும் தீவு நாடுகளாக மொரீஷியஸ், மடகாஸ்கர், செஷெல்ஸ், கோமரோஸ், ரியூனியன் தீவு (பிரான்ஸ்), மயோட் (பிரான்ஸ்), பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம் (BIOT), சிங்கப்பூர், மால்டிவ்ஸ்(மாலைதீவு), உள்ளிட்ட 10 தீவுக் நாடுகள் உள்ளன.
அதே நேரத்தில் இந்து சமுத்திரக்கரையை நேரடியாக தொடாமல் இந்து சமுத்திர நாடு அமைவில்லாவிட்டாலும், அதன் துறைமுகங்களை அவாவி நிக்கும், கடல் வழிகள் மற்றும் பொருளாதார மூலங்களை சார்ந்து பிழைக்கும் நாடுகளாக ஆசியா ஆபிரிக்கா நாடுகளாக நேபாளம் – இந்திய துறைமுகங்களாா கல்கத்தா, விசாகப்பட்டினம் ஆகியவற்றின் ஊடாக பயன்படுத்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும்.
பூடான்=இந்திய துறைமுகங்கள் வழியாக பொருளாதார உற்பத்திகளை ஏற்றி இறக்குகிறது. ஆஃப்கானிஸ்தான் –கராச்சி (பாக்கிஸ்தான்) மற்றும் சபாஹார் (ஈரான்) துறைமுகங்களை பெரிதும் சார்ந்துள்ளது. காஸகஸ்தான் – வழியாக இந்துமாகடலின் வழியாக உள்நாட்டு தேவையான பொருட்களைப் பெறுகிறது. உஸ்பெகிஸ்தான் – இந்திய துறைமுக வழிகளைச் சார்ந்து உள்ளது. உகாண்டா – மொம்பாசா (கென்யா) துறைமுகத்தை பயன்படுத்துகிறது. ருவாண்டா –கிழக்கு ஆப்பிரிக்க துறைமுகங்களை சார்ந்து உள்ளது புருண்டி –தான்சானியாவின் துறைமுகங்களைப் பயன்படுத்துகிறது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை
மேற்படி நாடுகளைத் தவிர்ந்து இந்து சமுத்திர நாடல்லாத பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளை தமது ஆட்சி பிராந்தியமாக வைத்திருப்பதனால் அவர்களும் இந்து சமுத்திர நாடுகளாக உரிமை பெறுவதோடு, இந்து சமுத்திரத்தில் தமது ராணுவ, கடற்படை , விமானப்படை தளங்களைக் கொண்டுள்ளனர்.
ஆனால் இன்று சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் இந்தியப் பெருங்கடல் வழிகளைப் பெரிதும் சார்ந்து உள்ளது. அதனாலேயே அது இந்து சமுத்திரத்தில் 5 துறைமுகங்களைப் பெற்று ஜிபுட்டியில் ஒரு ராணுவ தளத்தையும் அமைத்துக் கொண்டுள்ளது.
சீனா இலங்கைத் தீவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்ததன் மூலம் ஒரு நூற்றாண்டுக்கு இந்திர சமுதாயத்தில் தான் நிலையாக இருப்பதற்கான அத்திவாரத்தை இட்டு விட்டது.

இலங்கையின் இன்றைய சீனச் சார்பு நிலைப்பாட்டிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வலுவான காலூன்றலூக்கும் வழியமைத்து விட்டவர்கள் ஈழத்தமிழர்கள் என்ற கருத்து மேற்குலகம் சார்ந்த அணியிடம் வலுவாக உண்டு.
2005ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு சீனாவின் வேண்டுதலுக்கு ஏற்ப பகிஷ்கரிப்பு செய்தமைதான் ராஜபக்சக்கள் அரசியலில் காலூன்றி சீன நிலைப்பாட்டை எடுக்க காரணம் என்ற உள்ளார்ந்த கோபமும் மேற்குலகுக்கும், இந்தியாவிற்கும் உண்டு.
எனினும் இன்றைய சூழமைவில் ஈழத்தமிழர்கள் இந்து மாகடல் அரசியலின் மூலோபாய கேந்திர ஸ்தானத்தில் வாழ்வதனால் அவர்களுடன் இணைந்து செயற்படவேண்டிய புவிசார் அரசியல்சக்தியாக உள்ளனர் என்பது ஈழத் தமிழர்களுக்கு இருக்கின்ற இறுதிப் பலம்.
இத்தகைய ஈழத்தினுடைய தாயகத்தின் கேந்திர ஸ்தானம் என்றுமில்லாத அளவிற்கு இப்போது அதிக முக்கியத்துவத்தை பெறத் தொடங்கிவிட்டது. இந்த முக்கியத்துவம் ஆபிரிக்க நாடுகள் நோக்கிய சீனாவின் படர்ச்சியினாலேயே ஏற்பட்டுள்ளது அது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.