திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 19 பேருக்கு ஏற்பட்ட கதி!
குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை குளியாப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இன்று தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டி, கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே 19 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள்
செயற்படுவதால் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது என குளியாப்பிட்டி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி உத்பல
சங்கப்ப (Utpala Sankappa) தெரிவித்துள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri