தம்புள்ளை காணி மோசடியில் நடந்தது என்ன? சங்கக்கார வெளியிட்ட தகவல்
தம்புள்ளையில் சர்ச்சைக்குரிய முறையில் காணி ஒன்று பெற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தான் மற்றும் தனது மனைவியை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனி நபர்கள் கருத்து வெளியிடும் போது சிக்கில் ஏற்பட கூடும் என்பதனால் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காணி ஆணையாளரிடம முதலில் முறைப்பாடு செய்ததது தான் எனவும் இது தொடர்பில் காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்ததும் தான் எனவும் தான் அமைதியாக இருந்திருந்நதால் ஒருவருக்கும் இது தொடர்பில் தெரிய வந்திருக்காதென அவர் கூறியுள்ளார்.
தான் அறிந்த அளவில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் அணைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து தகவல்களும் தன்னிடம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
