கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு என்ன காரணம்?
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் மக்களின் முறையற்ற நடத்தையே தவிர வேறொன்றுமில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“பண்டிகை காலத்தை பண்டிகையாக கொண்டாட முடியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பேரணிகள் நடத்தினால் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், முறையான சுகாதார ஆலோசனை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் அனைவருக்கும் பண்டிகை காலத்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் புதிய திரிபுகள் உருவாகி வருகின்ற போதிலும் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றினால் மாத்திரமே அச்சமின்றி வாழ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் விதிகளை ஒதுக்கிவிட்டு, பொறுப்பற்ற வகையில் செயல்பட்டால், நாம் அனைவரும் இருண்ட கடந்த காலத்திற்குச் செல்ல வாய்ப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
