திட்டமிட்டு மோடியை சிக்க வைத்த ரணில்! (Video)
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் கௌதம் அதானிக்கு விற்கப்பட்டது என கூறினாலும், அது இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கௌதம் அதானியுடன் மேற்கு முனையம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட வேளையில், அதானி என்ற தனியார் குழுமத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள ஒரு திட்டம், என்றவாறே இந்தியா அதை சித்தரித்தது.
ஆனால் உண்மையில் அந்த உடன்படிக்கையானது இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதை கொழும்பு ஊடகம் ஆவணங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தது.
மேற்கு முனையம் தொடர்பான ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்தது என்பது அதன் பின்னரே வெளிக்கொண்டுரப்பட்டது" என குறிப்பிட்டிருந்தார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri