இலங்கை அணிக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் : 4 முக்கிய வீரர்கள் விலகல்
இலங்கை அணிக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடரிலிருந்து நிகோலஸ் பூரன், அண்ருவ் ரஸ்சல், அகேல் ஹொசைன் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி
இந்நிலையில், இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரி20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
ரி20 கிரிக்கெட் தொடர் தம்புள்ளையிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் கண்டியிலும் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இருபதுக்கு 20 போட்டித் தொடருக்காக ரொவ்மன் பவல் தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஷாய் ஹொப் தலைமையிலான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாம் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
[K7G3BPK
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri