நிவாரண பணியின் போது உயிரிழந்த விமானி.. முழு விமானப்படை மரியாதையுடன் இறுதிச் சடங்குகள்
வென்னப்புவ, லுனுவில பகுதியில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ஆம் திகதி முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற உள்ளன.
அவரது உடல் இன்று (02) லுனுவிலவில் உள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக விமானப்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை முதல் ரத்மலானை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
பதவி உயர்வு
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தியின் தலைமை விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மலா சியம்பலாபிட்டிய, லுனுவில பகுதியில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் இறந்தார்.

அவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக, நவம்பர் 30ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது சியம்பலாபிட்டிய இந்த விபத்தை எதிர்நோக்கினார். உலங்குவானூர்தி அருகிலுள்ள கால்வாயில் மோதியது.
சிறந்த அனுபவம்
அந்த நேரத்தில், விமானத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து விமானப்படை வீரர்கள் இருந்தனர், மேலும் உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிஸாரினால் அவர்கள் விரைவாக மீட்கப்பட்டு மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், தலைமை விமானி, 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, விபத்தில் கொல்லப்பட்டார்.
அவர் 3,000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணத்தை மேற்கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் மாரவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam