ஆபத்தான பகுதியாக மாறியுள்ள வெள்ளவத்தை! - தனிமைப்படுத்தப்பட்ட பெரகும்பா குடியிருப்பு
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பெருமாளவான கோவிட் தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீபிரதாபன் இதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி சுகாதார பிரிவில் நாளாந்தம் நடத்தப்படும் கோவிட் பரிசோதனைகளில் சுமார் 30 தொடக்கம் 40 வீதமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, வெள்ளவத்தை பகுதியில் பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் சுமார் 100ற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரகும்பா பகுதியில் மாத்திரமே கொத்தணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனினும், வெள்ளவத்தை பகுதியில் வேறு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான கொத்தணி உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri