சுரேஸ் சலேவுக்கு திடீரென மாரடைப்பு
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் திடீரென நோய்வாய்ப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ கண்காணிப்பு
தற்போது அவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மருந்துகளை உட்கொள்ளவும் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு