வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் திடீர் சோதனை நடவடிக்கைகள்
கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சோதனையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு விற்பனை நிலையங்கள் சோதனையிடப்பட்டன.
கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களை சோதனையிட்டனர்.
தரமற்ற உணவுகள்
இதன்போது பல இடங்களில் மனித பாவனைக்கு உணவுகளை விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரையோர பகுதி இரவு உணவு விற்பனை நிலையங்களை சோதனையிட்டனர். இங்கு, மக்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற உணவுகளை விற்கும் பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |