வெள்ளை கோட்டில் வீதியை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
வெலிமடையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடந்த பாடசாலை மாணவர் ஒருவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புல, பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் நேற்று (07) நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் விசாரணை
தனியார் வகுப்பில் கலந்துகொள்ள வந்த பாடசாலை மாணவர் வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடக்க முற்பட்ட போது, முச்சக்கரவண்டியொன்று மாணவன் மீது மோதியதில் பாடசாலை மாணவன் தரையில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் திம்புல பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை (08) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam