M.A பட்டம் பெற்ற வெலிக்கடை சிறைக்கைதி
நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் களனி பல்கலைகழகத்தில் MA பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார்.
சிறைச்சாலையில் இருந்து கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பட்டம் பெற்ற இரண்டாவது நபராக சந்தன குருசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இதேபோன்ற பட்டம் பெற்ற கைதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக இடம்பிடித்தார்.
மொஹமட் சியாம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டிருந்த முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான இந்திக்க பமுனுசிங்க என்பரே முதல் முறையாக பட்டம் பெற்றவராகும்.
புனர்வாழ்வு ஆணையாளரான சந்தன ஏக்கநாயக்கவின் தலைமையில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட சந்தன குருசிங்க என்ற கைதி இம்முறை பட்டம் பெற்றுள்ளார்.
அவர் தனது கற்கையின் போது விசேட சித்தியை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.