வெலிக்கடை சிறைக் கைதி மரணம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மூன்று காவலர்கள் கைது
வெலிக்கடை சிறையில் மூன்றாம் நாள் நடைபெற்ற தூய்மைப் பணியின்போது தப்பிச் சென்ற உயிரிழந்த கைதி, சிறை அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அந்தக் கைதி திடீரென உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட கைதி சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.