பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரம்! நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (24.05.2023) நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
கடும் வாக்குவாதம் பதிவு
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடும் வாக்குவாதம் பதிவாகியிருந்தது.
இந்த விஜயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது.
பதுளையை சேர்ந்த தமிழ் பெண்ணிண் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறும் என பிரதமர் உறுதியளித்துள்ளார் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மனோவிற்கு ஆதரவு வழங்கிய விமல் மற்றும் சஜித்
இந்த விடயத்தை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொண்டு வந்த வேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அவருக்கு ஆதரவளித்தனர்.
இந்த விடயத்தை சாதாரணமாக கருதமுடியாது என தெரிவித்த விமல் வீரவன்ச, இந்த சம்பவம் குறித்து உரிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அப்பாவிகள் கொல்லப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறும் என பிரதமர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Parliament Live

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
