வெலிகம பிரதேச சபையின் தலைவர் தொடர்பில் மீண்டும் சர்ச்சை..
பல சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்குக் களமாக இருந்த வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கோரம் இல்லாததால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்டதையடுத்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் பதவி வெற்றிடமானது.
தொடரும் சர்ச்சைகள்
தென் மாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நவம்பர் 28 ஆம் திகதி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக சபை கூட்டப்பட்ட போதும் கோரம் இல்லாததால், தேர்தல் வாக்கெடுப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, 45 உறுப்பினர்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (26) காலை 10:00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால், இன்றைய சபைக் கூட்டத்திலும் 22 உறுப்பினர்களே கலந்து கொண்டதால், போதுமான கோரம் இல்லாததால் தலைவர் தேர்வை ஒத்திவைக்க உள்ளூராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam