கிழக்கு மாகாணத்தில் அரசினால் நடாத்தப்பட்ட நலன்புரி வேலைத்திட்டங்கள்
அரசினால் கிழக்கு மாகாணத்தில் அஸ்வசும பயனாளிகளின் நன்மை கருதி பின்தங்கிய பிரதேச செயலகத்தின் பகுதிகளில் நலன்புரி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் தேசிய அடையாள அட்டை இல்லாத பயனாளிகளின் நன்மை கருதி பிரதேச செயலகங்கள் ஊடாக நடமாடும் சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம், அஸ்வசும திட்டதிற்கு இரண்டாம் கட்டமாக இணைத்துக் கொள்ளவுள்ள பயனாளிகளை குறித்த காலத்திற்குள் உள்வாங்குவதற்காக இந்த செயற்றிட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
துரித நடவடிக்கை
அதற்கமைய, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |