உறுதிப்படுத்தப்படும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்கள்
சபாநாயகர் அசோக ரங்வல(Ashoka Ranwalla) தனது கலாநிதி பட்டம் தொடர்பான உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்து, தனது கல்விச் சான்றிதழ்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா(Nalaka Godahewa) தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைதி காக்கும் சபாநாயகர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றிருந்தால் அதனை உறுதிப்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. இது குறித்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது சபாநாயகர் அமைதியாக இருப்பது உகந்ததல்ல.
நாடாளுமன்றத்தை கல்வி கற்ற சமூகத்தைக் கொண்டு நிரப்புமாறு இந்த அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த போதிலும், அது மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
