மக்கள் நலன் சார்ந்த தனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
“ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினாலும் பொய்யான பிரச்சாரங்களினாலும் மக்கள் நலன் சார்ந்த தனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கடலட்டைப் பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களை நேற்று (02.11.2022) சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையான தகவல்களை எடுத்துச் செல்லவேண்டும்
கடலட்டைப் பண்ணைகளுக்கு விண்ணப்பம் செய்த சிலரே நடைமுறைச் பிரச்சினைகள் காரணமாக இதுவரை கிடைக்காத நிலையில், கடற்றொழிலாளர்களின் சமாசங்களின் பெயரால் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் போது, அவை மக்களின் மனங்களில் ஆழமான கருத்துக்களாக பதிந்துவிடும் என்ற ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் கோட்பாடுகளில் ஒன்றை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கடலட்டை பண்ணைகள் பற்றிய உண்மைகள் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 12 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri