வடக்கில் சுகாதார தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக யாழ் நலன்புரி சங்கம் குற்றச்சாட்டு
வட மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் நலன்புரி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (27.07.2023)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் நாகராசா ஜீவிதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு நலன்சார் திட்டங்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிலாளர் பிரச்சினை
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “ இதனால் அனேகமானோர் மன உளைச்சலுக்கும், உடல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
திண்ம கழிவகற்றும் சுகாதார ஊழியர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்,அவர்களுக்கு முறையான அணி கவசங்களை வழங்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லமையால் அனேகமான தொழிலாளர்கள் உடல் ரீதியிலான அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்” என்றார்.
இனிவரும் காலங்களில் சுகாதார தொழிலாளர்களின் உரிமைகள் யாழ் நலன்புரி சங்கத்தினால் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
