நீரில் மூழ்கிய 2 வயது சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சம்மாந்துறையில் சகோதரனுடன் விளையாடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (9) சிறுவன் தனது சகோதரனுடன் விளையாடிய நிலையில் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த விபத்தில் 2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
இறந்த சிறுவனது சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் செவ்வாய்க்கிழமை (9) மாலை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
