பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவியின் கோரிக்கை
பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவி கயானி முத்துமால பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
தனது கணவரின் மரணம் குறித்து மீள விசாரிக்குமாறு இந்த கடிதம் மூலம் அவர் கோரியுள்ளார்.
பொலிஸ் காவலில் இருந்தபோது கொல்லப்பட்ட அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கயானி முத்துமால குற்றம் சாட்டியுள்ளார்.
கோரிக்கை
துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாகந்துரே மதுஷ், மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மீட்பதாக கூறி 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் மாளிகாவத்தை குடியிருப்பு வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்போது, பொலிஸாருக்கும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளுக்கும் இடையே நடந்த பரஸ்பர துப்பாக்கிச்சூட்டின்போது, சுட்டுக் கொல்லப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam