திடீரென பதவி விலகிய அரசின் முக்கிய துறையின் தலைவர்
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் இன்று(15.08.2023) அறிவித்துள்ளார்.
இதேவேளை பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தணிக்கும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக, நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக பல உதவி திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
பொருளாதார உதவி
இதற்கமைய நாட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கக்கூடிய அரசின் முக்கிய துறையின் ஓர் அம்சமாக நலன்புரி நன்மைகள் சபை காணப்படுகின்றது.
மேலும் நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்த்து மக்களுக்கு உதவும் வகையில் ஜனாதிபதியினால் அண்மையில்'அஸ்வெசும' நலன்புரி உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
