தமிழர் பகுதியில் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்
மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றில் மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது காணப்படுகின்றது.
தேற்றாத்தீவு - பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவின் முக்கிய புள்ளி சுட்டுக்கொலை.. அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிகள் - ட்ரம்ப் அறிவிப்பு
மாம்பழத்திருவிழா
ஆலயத்தில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வந்ததை தொடர்ந்து வெளிவீதியுலா நடைபெற்றதுடன் அங்கு மாம்பழ திருவிழா நடைபெற்றது.
முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப்பெறுவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளையும் தாய் தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த திருவிழா நடாத்தப்படுகின்றது.
இதன்போது மாம்பழத்திருவிழாவுக்கு பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஆலயத்தில் ஏலத்திற்கு விடப்பட்டபோது சுமார் இரண்டரை இலட்சம் ரூபா ஏலத்தொகையினைக்கொண்டு இளையதம்பி தவாகரன் என்ற அடியார் மாம்பழத்தினை வாங்கிக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
