வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக வரப்போகும் பணம்! நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறியப்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நலன்புரி கொடுப்பனவு
மேலும் கூறுகையில், புதிய முறைமை நடைமுறையாகும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது.
குறைந்த வருமானம் கொண்டோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக, தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது நேரடியாக வங்கிகளிலேயே வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The current welfare benefit payments for Low-Income Senior Citizens, Kidney Patients and Differently Abled will remain unchanged until the new system is developed. We request the beneficiaries to open a bank account & inform the divisional secretariat for future transactions. pic.twitter.com/S5Pt8lNVFN
— Shehan Semasinghe (@ShehanSema) July 28, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
