ஜூலை முதல் நேரடியாக வங்கிக்கு வரும் பணம்! வெளியான பெயர்பட்டியல்
பயனாளிகளுக்கான நலன்புரி உதவி திட்டத்தின் கீழ் 23 இலட்சம் பேர் தகுதியான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நலன்புரி உதவி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் நேற்று (20.06.2023) நிதியமைச்சில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளின் பட்டியல்
இந்த பட்டியல் இன்று(21.06.2023) முதல் பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் கிராம சேவை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதன்படி இன்று(21.06.2023) முதல் 10 நாட்களுக்கு ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயனாளிகளுக்கு நலன்புரி உதவியாக 208 பில்லியன் ரூபா வழங்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்தில் அந்த பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |