ஜூலை முதல் நேரடியாக வங்கிக்கு வரும் பணம்! மக்களுக்கு நற்செய்தி
நிவாரண பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிா்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,நிவாரண பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிா்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்
(2/2) This will ensure welfare benifits will be given on a transparent selection process by which the recipients can be identified. Dates will be notified to submit objections to the names included in the list or claims to be included to conduct an inquiry & arrive at a decision pic.twitter.com/ciDSA5OCJB
— Shehan Semasinghe (@ShehanSema) June 13, 2023
இதற்காக சுமார் 95 சதவீத பயனாளிகளின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பயனாளிகளின் தகவல்கள்
குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வழங்கப்பட்ட குழு அதனை உறுதி செய்துள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
இதேவேளை ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |