வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 நாட்கள் கால அவகாசம்

Parliament of Sri Lanka Shehan Semasinghe Money
By Mayuri Jun 21, 2023 05:58 AM GMT
Report

அரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன, ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (20.06.2023) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சந்திம வீரக்கொடி குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் மூத்த பிரஜைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. அதேவேளை, வலது குறைந்தவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் இவ்வாறு வழங்கப்படுவதில்லை.

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 நாட்கள் கால அவகாசம் | Welfare Allowance By Government Sri Lanka

அது தொடர்பில் நிதியமைச்சு உடனடி கவனத்தை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள் நிலையில் இதற்கு பதில் நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நிதி அமைச்சானது மக்களுக்கு வழங்கும் நிவாரண கொடுப்பனவுகளில் எத்தகைய குறைபாடுகளையும் வைக்கவில்லை. அவ்வாறான கொடுப்பனவுகள் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஏதாவது பிரதேச செயலாளர் பிரிவிற்கு அந்த கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை யென்றால் நாம் சமூக ஊக்குவிப்பு அமைச்சின் மூலம் அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

33 இலட்சத்து 43110 பேர் தெரிவு

இதேவேளை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் நிதி அமைச்சர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 நாட்கள் கால அவகாசம் | Welfare Allowance By Government Sri Lanka

இதில் கலந்து கொண்டு பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகையில், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள 33 இலட்சத்து 43110 விண்ணப்பதாரர்களுக்கு ஜுலை முதல் வாரத்திலிருந்து நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.


இதற்கு தகுதிபெற்றுள்ளவர்களின் விபரங்கள் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதற்கமைய இம்மாதம் 30ஆம் திகதி வரை இது தொடர்பான ஆட்சேபனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட, வறுமை நிலைமையிலுள்ள, மிகவும் வறுமை நிலையிலுள்ள மற்றும் ஏழ்மையானவர்கள் என்ற 4 கட்டங்களின் கீழ் இந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் ஜுலை முதல் வாரத்திலிருந்து பயன் பெறுனர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படவுள்ளன.

தகுதியானவர்களின் விபரம் இணையத்தளத்தில்

இந்த வேலைத்திட்டத்தின் காரணமாக சமுர்த்தி வழங்கும் சேவை ஒருபோதும் நீக்கப்பட மாட்டாது. சமுர்த்திப் பயனாளிகளும் இதில் உள்வாங்கப்படுவர். நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்தக் கொடுப்பனவுகளை பெறத் தகுதியானவர்களின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 நாட்கள் கால அவகாசம் | Welfare Allowance By Government Sri Lanka

இந்தப் பட்டியலை சகல பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் காரியாலங்களிலும் பார்வையிட முடியும். அதற்கமைய விண்ணப்பதாரர்கள் 10 நாட்களுக்கு ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.

கிடைக்கப்பெறும் ஆட்சேபனைகள் உனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். https://www.wbb.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பெயர்ப் பட்டியலைப் பார்வையிட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US