அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன் : டக்ளஸ் தேவானந்தா
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று அமைக்கப்பட்டு இன்றையதினம் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே. ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து தகவல்களை பெற்றுக்கொள்வதுண்டு. அந்தவகையில் அது வரவேற்ககூடிய விடயமே.
அத்துடன் இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவை பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமையும் நல்ல விடயமே. சட்டரீதியான பிரச்சனைகள் இருப்பதால் 51 வீதத்தை இலங்கை அரசும் வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலேயே அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றவகையில் அது செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்காகவே அதனை வழங்குவதாக கூறுகின்றமை எதிர்கட்சி அரசியல்வாதிகள் வழமையாக கதைக்கும் விடயமே என்று கூறியுள்ளார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன, பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உதவிபொலிஸ் அத்தியட்சகர் மல்வளகே ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.











யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
