சரத் பொன்சேகாவுக்கு சபையில் பதிலடி கொடுத்த சரத் வீரசேகர
பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா (Sarath Fonseka) நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பீல்ட் மார்ஷல் பதவி இராணுவத்தின் உயர் பதவியாகும். அந்தப் பதவியை வகிப்பவருக்கு அரச சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது. எனவே, மக்களுக்கு சரத் பொன்சேகா சேவையாற்ற வேண்டும்.
நல்லாட்சி அரசு போர்க்குற்றம் தொடர்பில் படையினரைக் காட்டிக்கொடுத்தது. அப்போது பொன்சேகா மௌனம் காத்தார் என தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கும் சரத் வீரசேகரவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் தொடர் சொற்போர் நீடித்து வருகின்றது.
இந்நிலையில், நேற்று சரத் பொன்சேகா ஆற்றிய உரை மற்றும் இன்று சரத் வீரசேகர ஆற்றிய உரைகளில் இருந்து பொருத்தமற்ற விடயங்களை நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |