வார இறுதியில் நாடு முழுவதும் அமுலாகும் நடவடிக்கை - பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் தரப்பினர் மற்றும் நிகழ்வுகளை நடத்துவோரை கைது செய்ய வார இறுதியில் பொலிஸார் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி சினிமாக்கள், விடுதிகள், கேளிக்கையகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பிற பொதுக்கூட்டங்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே சுகாதார அதிகாரிகள் பிறப்பிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவு மூலம் தகவல்களை சேகரிக்குமாறும் பொலிஸ் நிலையங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொது மக்களை வீட்டுக்குள் தங்கியிருந்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அஜித் ரோஹன கோரியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
