திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி - திடீரென மாயமான தங்க நகைகள்
குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் திருமணத்தின் இரண்டாவது நாள் கொண்டாட்டத்தில் மணமகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபரையும் தங்க நகைகளையும் பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்விற்கு வந்திருந்த விருந்தினர்கள் கலைந்து செல்லும் நேரத்தில் மணமகளுக்கு பெற்றோரால் சீதனமாக வழங்கப்பட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது.
திடீரென மாயமான தங்க நகைகள்
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார், உறவினர்களைத் தவிர வெளியில் இருந்து வந்த சமையற்காரர்கள், இசை மற்றும் ஒலிப்பெருக்கி சேவைக்காக வந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.

இறுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்டவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
சந்தேக நபரின் நடமாட்டங்களை கண்காணித்த பொலிஸார், காணாமல் போன 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை, திருமண நிகழ்விற்கு உதவியாக வந்த நபர் திருடிச் சென்றமை தெரிய வந்துள்ளது.
குறித்த நகைகளை பிரதான வீதியொன்றின் அருகில் மறைத்து வைத்திருந்த நிலையில், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.