சட்டவிதிமுறைகளை மீறி திருமண நிகழ்வு! அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை
நுவரெலியா மாவட்டம், கொட்டகலை பிரதேசத்தில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை திருமண நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது எனவும், குறித்த நிகழ்வில் பங்கேற்ற 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கொட்டகலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் - குடாகம பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி நேற்று திருமண நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 119 என்ற அவசர இலக்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து திம்புள்ளைப் பொலிஸார் குறித்த இடத்தைச் சுற்றிவளைத்துள்ளதுடன் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில், 15 பேர் பங்கேற்றுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்ப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டலை மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹோட்டலிலுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொட்டகலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam