மருத்துவ வழங்கல் பிரிவின் இணையத்தளம் செயலிழப்பு! மருந்துகளின் தரம் குறித்து அறிவதில் சிக்கல்
சுகாதார அமைச்சின் கீழுள்ள இலங்கை மருத்துவ வழங்கல் பிரிவின் இணையத்தளம் தரவேற்றப்படாமல் செயலிழந்துள்ளதன் காரணமாக மருந்துகளின் தரம் குறித்து அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மருத்துவ வழங்கல் பிரிவின் இணையத்தளம் கடந்த சில மாதங்களாக தரவேற்றப்படாமல் செயலிழந்து காணப்படுகின்றது.
மருந்துகள்
அதன் காரணமாக மருந்து ஒன்றின் தரம் குறித்தோ அல்லது மருத்துவமனைகளின் பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ள மருந்துகள் குறித்தோ அறிந்து கொள்வதற்கான பொதுமக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு திடீர் இருதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் டெனடோபேஸ் எனப்படும் மருந்து அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களில் குறித்த மருந்தைப் பயன்படுத்திய நோயாளிகள் மருத்துவரீதியான சிக்கல்களை எதிர்கொண்டதன் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து அந்த மருந்து அகற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உரிமை
ஆனால் அது தொடர்பான தகவல் மருத்துவ வழங்கல் பிரிவின் இணையத்தளத்தில் இதுவரை தரவேற்றப்படவில்லை. அவ்வாறான சிக்கல்களை ஏற்படுத்தும் மருந்துகள் குறித்தோ, ஏனைய மருந்துகளின் தரம் குறித்தோ அறிந்து கொள்ளும் பொதுமக்களின் உரிமை அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்:டுள்ளது.
உண்மையில் திட்டமிட்ட வகையில் வேண்டும் என்றே இவ்வாறான செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்படுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும் மருத்துவர் சமல் சஞ்சீவ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
