அடுத்த மாதம் முதல் இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! 11 மாதங்களுக்கு தாக்கம்
எல் நினோ நிகழ்வால் இலங்கையின் வானிலையில் பாரிய மாற்றம் பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி அடுத்த மாதம் முதல் எல் நினோ நிகழ்வால் நாட்டின் வானிலை பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வானிலையில் தாக்கம்
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எல் நினோ நிகழ்வு தென்மேற்குப் பருவமழை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே எல் நினோ நிலை உருவாகியுள்ளது. அதன் தாக்கம் பல்வேறு நிலைகளில் சுமார் 11 மாதங்களுக்கு நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேட கலந்துரையாடல்
இதேவேளை நாட்டின் வானிலையில் எல் நினோ விளைவால் ஏற்படக்கூடிய தாக்கங்களைச் சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இன்றைய தினம் (10.06.2026) நடைபெற உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, பேரிடர் மேலாண்மை மையம், விவசாயத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை என முக்கிய அமைப்புகள் உட்பட 20 பிரதான துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri