மட்டக்களப்பில் இடையிடையே மழை - பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் படையினர்
வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்சி மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடையிடையே பெய்து வருவதுடன், தொடர்ந்து வானம் மேகமூட்டம் சூழ்ந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு ஏற்படுமாக இருப்பின் அதனை எதிர்கொள்ள இராணுவத்தினர், கடற்படை உள்ளிட்ட முப்படையினரும், தயர் நிலையில் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர்பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதில் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது.

பதிவான மழைவீழ்ச்சி
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (09.01.2026) காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் வாகனேரி பகுதியில் 45.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 33.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 23 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனை பகுதியில் 25.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர்ட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri