இலங்கைக்கு குறுக்காக நகரும் தாழமுக்கம்! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது நாளையளவில் (26.12.2022) இலங்கையின் மேற்குக் கடற்பரப்புகளுக்கு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதற்கிணங்க, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த காற்றுடன் மழை
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri